Pages

Saturday, September 14, 2019

நபி (ஸல்அவர்களின் காலத்தில் இலங்கை 
  
மாற்றங்களைப் போலவே மாற்றங்களை அடையாளம் காண்பதுவும் பலபோது மனிதனுக்கு பயன் சேர்க்கின்றதுஜஃபர் இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்;, இஸ்லாத்திற்கும் தாம் ஏற்கனவே இருந்த ஜாஹிலிய்யாக் காலத்திற்குமிடையிலான மாற்றங்களை எடுத்தியம்பியமை இஸ்லாத்தினைப் புரிய நல்லதோர் வாய்ப்பினை நஜ்ஜாஸி மன்னனுக்கு ஏற்படுத்தியது 
  
அரேபியாவின் ஜாஹிலிய்யாக் காலத்துடனான வழமையான ஒப்பீட்டுக்கப்பால், 'நபி (ஸல்அவர்களின் காலத்தில் இலங்கைஎன்ற தலைப்பிலான ஆரோக்கியமான ஓர் ஒப்பீட்டாய்வுஇலங்கை முஸ்லிம்களாகிய நம்மிடத்தில் இறைவழிகாட்டலின் உண்மை நிலை பற்றிய நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றதுவேறு விதமாக சொல்வதானால்நபி (ஸல்அவர்களின் கால இலங்கை பற்றி நாம் கவனம் செலுத்தாதவரைஜாஹிலிய்யாக் காலத்துடன் இஸ்லாத்தை ஒப்பிடுவதன் மூலம் ஓர் அரபி பெறும் இஸ்லாத்தின் மகத்துவம் பற்றிய உள்ளார்ந்த புரிதல் எப்போதும் நமது புரிதலை விஞ்சியே காணப்படும் 
  
கி.மு. 437  முதல் கி.மு. 367 வரை ஆட்சிபுரிந்த பண்டுகாபயன் இலங்கையின் முதல் மன்னனாக கருதப்படுகின்றான்கி.மு. 367 முதல் 307 வரை மூத்தசிவனாலும்கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை தேவநம்பியதீஸனாலும் இலங்கை ஆளப்படுகின்றதுதேவநம்பியதீஸ மன்னனுடைய காலத்தில் இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்படும் வரை பேய்பிசாசுகளை வணங்குவதான ஏற்பாடுகளே பண்டுகாபயன் காலத்தில் முன்னெடுக்கப்படடனகி.மு. 250 ஆம் ஆண்டில் மகிந்த தேரரும்கி.மு. 249 ஆம் ஆண்டில் சங்கமித்த பிக்குணியும் இலங்கைக்கு வருகை தந்தனர் 
  
பண்டுகாபயனின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் தலைநகராக உருவெடுத்த அநுராதபுரம் தொடராக 14 நூற்றாண்டுகள் இலங்கையின் தலைநகராக திகழ்ந்ததுமன்னர்கள் பலரின் வருகைக்கிடையில் பாரிய நிர்மாணங்கள் சேவைகள் செய்த துட்டகைமுனுவசபன்மகாசேனன்காசியப்பன் ஆகிய மன்னர்களது ஆட்சிகள் அநுராதபுரக் காலத்தில் தோன்றி மறைகின்றனஇலங்கையின் முதன் முதலான இலக்கிய மூலாதார நூலாக கருதப்படும் தீபவம்சம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலும்இரண்டவதான மகாவம்சம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலும் எழுதப்படுகின்றன 
  
இலங்கையில் கீர்த்தி சிறீ மேகவன்னனின் ஆட்சி நிலவும் போது (கி.பி. 555 - கி.பி. 573). நபி (ஸல்அவர்கள் கி.பி. 570 இல் மக்கா நகரில் பிறந்தார்கள்கி.பி 573 முதல் கி.பி. 575 வரை மகாநாக மன்னனால் இலங்கை ஆளப்படும் போது நபியவர்கள் மக்கா நகரில் ஓர் இளம் சிறுவனாக இருந்தார்கள் 
  
கிபி. 575 முதல் கி.பி. 608 வரை முதலாம் அக்போ மன்னனின் ஆட்சியின் கீழ் இலங்கை இருக்கும்போதுமக்கா நகரில் சமூக விடயங்களில் கவனம் செலுத்தும்நன்மதிப்புடன் வியாபார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபடும்அல் அமீன்அஸ் ஸாதிக் என அழைக்கப்படக்கூடிய வாலிபராக நபி (ஸல்அவர்கள் காணப்பட்டார்கள் 
  
கி.பி. 609 ஆண்டில் அதாவது நபி (ஸல்அவர்களின் 40 ஆம் வயதில் தூதுத்துவம் கிடைக்கும்போது இலங்கை இரண்டாம் அக்போ மன்னனால் (கி.பி. 608 முதல் கி.பி. 618) ஆளப்பட்டு வந்தது 
  
தூதுத்துவம் கிடைத்தது (கி.பி. 609) முதல் மதீனாவிற்கான ஹிஜ்ரத் (கி.பி. 622) வரையான நபி (ஸல்அவர்களின் மக்கா காலப்பகுதியின் போதுஇலங்கை மேற்குறிப்பிட்ட மன்னனின் காலத்துடன் சங்கதிஸ்ஸ (கி.பி. 618 - இரண்டு மாத ஆட்சி), மூன்றாம் முகலன் (கி.பி. 618 முதல் கி.பி. 623) ஆகிய மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்தது 
  
கி.பி. 622 முதல் கி.பி. 632 இல் தான் இறப்பு வரையான நபி (ஸல்அவர்களது மதீனா ஆட்சியின் போதுஇலங்கையை மூன்றாம் முகலன்அஸிக்காரக  (கி.பி. 623 முதல் கி.பி.632), மூன்றாம் அக்போ (கி.பி. 632 - ஆறு மாதங்கள் - முதல் ஆட்சிக் காலம்ஆகியோர் ஆண்டனர் 
  
இலங்கை வரலாற்றினை தழுவியதாக கூறுவதாயின் இந்நாட்டு மன்னன் மூன்றாம் அக்கபோவின் முதல் ஆட்சிக் காலப்பகுpயில் நபி (ஸல்அவர்கள் வபாத் ஆனார்கள் (கி.பி. 632 ஜுன் மாதம் 8 ஆம் திகதி ). இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 


அவதானங்கள்

  1. வரலாற்றாசிரியர்கள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தீபவம்சத்தையும்கி.பி 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தையும்இலங்கை பற்றிய வரலாற்றைக் கூறும்ஆதாரபூர்வமான பிரதான மூலாதாரங்களாக கருதுகின்றனர்குறித்த நூல்களுடன் ஒப்பிடும் போது காலத்தால் பிந்திய கி.பி. 618 முதல் கி.பி. 632 வரையான காலப்பகுதியில் எத்திவைக்கப்பட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்துள்ள வஹீ எவ்வளவு தூரம் ஆதாரபூர்வமான தன்மையை கொண்டிருக்கும் என்பதனை உணர்த்துகின்றது.
  2. மனனம் செய்யும் ஆவல்அதற்கான ஆற்றலலுடனான ஸஹாபிகளின் சூழலையும்அனஸ் பின் மாலிக் (றழிஅவர்கள் 'நபியவர்களின் தலையிலும் தாடியிலுமாக மொத்தம் பதினான்கு நரைத்த முடிகளே இருந்தனஎன கூறுமளவிற்கான நபியவர்கள் மீதான ஸஹாபிகளின் அலாதியான அவதானத்தையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.
  3. நம் வரலாற்றறிவிற்கு உட்படும் பாரிய நிர்மாணங்களை உருவாக்கிய தகுதி வாய்ந்த மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டனர்ஆன்மீக விமோசனத்திற்கான அவர்களது முயற்சியகள் பல்வகைப்பட்டமை கண்கூடுசமகாலத்தில் இணை வைத்தல்சிலைவணக்கம் அற்ற ஏக இறைக் கொள்கை போதிக்கும்ஓர் தூதுத்துவம் முன்வைக்கப்பட நபி (ஸல்அவர்களிற்கு இறை வழிகாட்டல் நிச்சயம் கிடைத்திருக்க வேண்டும்.
  4. கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் பின்னர் இந்து சமுத்திரத்தில் நடைபெற்று வந்த சர்வதேச வர்த்தகம் அரேபியர் வசமாகியதாக நமது வரலாறு கூறுவதுடன்இரண்டாம் நகரமயமாக்கல் என அடையாளம் காணப்படும் தலைநகர்களின் தென் மேற்கு நோக்கிய (தாழ் நாட்டு ஈரவலயம்நகர்வு தாமதமடைந்தமைக்கான பிரதான காரணியொன்றாக இச்சர்வதேச வர்த்தகத்தை நிர்வகிக்க வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்படுகின்றதுஇஸ்லாத்தின் வருகையுடன் அரேபியரின் வர்த்தகம் சர்வதேச ரீதியாக வியாபகமடைந்திருப்பதை நாம் இங்கே அவதானிக்கலாம்.
  5. அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு நம் அரசர்களின் முழு வாழ்வும்முயற்சியும்எண்ணமும் வேண்டப்பட்டனஅநுராதபுர காலத்தில் வந்து போன அரசர்களின் எண்ணிக்கை 120 க்கும் மேற்பட்டதாகும். ஆட்சியாளனின் தெரிவுகடமைகள்பொறுப்புக்கள்முன்மாதிரியான போராட்ட தர்மங்கள் என்பவற்றை பல சவால்களுக்கு மத்தியில் ஆட்சியாளனாக இருந்து கொண்டே வரையறுத்த நபி (ஸல்அவர்கள் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் தேவையான ஆன்மீகம்குடும்பம்பொருளாதாரம் உட்பட சமூகத்திற்குத் தேவையான ஒட்டுமொத்த வழிகாட்டலை வழங்கினார்கள். 'உங்களிடம் இரு விடயங்களை விட்டுச் செல்கின்றேன்அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்என நபி (ஸல்அவர்கள் குறிப்பிட்டார்கள்.
  6. பொதுவாக சமூகத்தினதும்குறிப்பாக தன் 11 துணைவியரினதும் கூர்ந்த அவதானிப்பின் கீழ் நிறைவான வழிகாட்டல்களை வழங்கி அவற்றை பின்பற்றுவதில் தன்னையே முன்னுதாரணமாக்கி யதார்த்தபூர்வமாக வாழ்தல் இறை வழிகாட்டலின்றேல் சற்றேனும் சாத்தியமற்றதாகும்
  7. கருத்தில் கொள்ளப்பட்ட மன்னர்களால்தனக்குப் பின்னால்தன்னை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும் தனிமனிதர்களை உருவாக்குவதே எட்டாக்கனியாக இருந்த சமகாலத்தில் அனைத்து விடயங்களிலும் அணுவணுவாக தன்னை ஆவலுடன் பின்பற்ற முனையும் ஓர் சமூகத்தை தன் வாழ்நாளிலேயே பல ஜீவ மரணப் போராட்டங்களிற்கு முகங் கொடுத்த நிலையில் உருவாக்கிக் காட்டுவதற்கு நபி (ஸல்அவர்களுக்கு கிடைத்த இறை வழிகாட்டலே துணை நின்றதுநபி (ஸல்அவர்கள் தன் வாழ் நாளில் 27 போராட்டங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாக இப்னு உமர் (றழிஅவர்கள் அறிவித்துள்ளார்கள் 
    
இலங்கையினதும் சர்வதேசத்தினதும் வரலாறு பற்றிய தேடல் எம்மிடம் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.